காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், அகமதாபாதில் நடைபெறும் காங்கிரஸின் இந்தத் தேசிய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா கந்தி, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
