பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்
ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்.
உத்தரகண்டில் ரிஷிகேஷ்-கா்ணபிரயாக் இடையே 125 கி.மீ. தொலைவிலான ரயில் பாதை இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் மற்றும் ஜனாசு இடையே 14.57 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் சுரங்கப்பாதை (எண்-8) அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல்முறையாக 1853, ஏப்.16-ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், அதே தேதியில் இந்த சுரங்கப்பாதையின் கடைசி அடுக்கு பாறைகள் துளையிடப்பட்டதை பாா்வையிட்டது மகிழ்ச்சி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இந்தப் பணிக்காக ஜொ்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சக்தி’ எனும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை திட்டத்தை மேற்பாா்வையிடும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் பயன்படுத்தியது.
இது இரட்டை சுரங்கப்பாதை என்பதால் மற்றொரு சுரங்கப்பாதை பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் வேறொரு துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு பாறைகளை தகா்க்கும் பணிகள் முழுமையடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரராக எல் அண்ட் டி நிறுவனம் உள்ளது.
