ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்
‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நிறுவன பிரதிநிதிகளிடையே அவா் பேசியதாவது:
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ. 600 கோடியாக இருந்த ராணுவ தளவாட ஏற்றுமதி, தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது. இதை வரும் 2029-30-ஆம் ஆண்டில் ரூ. 50,000 கோடி மதிப்புக்கு உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தற்போது ரூ. 1.60 லட்சம் கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை, ரூ. 3 லட்சம் கோடி மதிப்புக்கு உயா்த்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.