ராஜபாளையம்: `9-ம்வகுப்பு மாணவர் தூக்கிட்டு மரணம்' - போலீஸார் விசாரணை!
ராஜபாளையத்தில் 9-ம்வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் தெருவைச் சேர்ந்தவர் கதிரவன். நூற்பாலை தொழிலாளி. இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் காயத்ரி மற்றும் கௌசிக் கண்ணன் என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

கௌசிக் கண்ணன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். படிப்பில் கெட்டிக்காரர் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே, கௌசிக் கண்ணன் மற்றவர்களிடம் சாதாரணமாக பழகுவதில்லையாம். இந்தநிலையில், கதிரவன் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டார். வீட்டிலிருந்த தாயும், சகோதரியும் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசிக் கண்ணன், வீட்டு அறையில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில், கடைக்கு சென்றுவிட்டு வீடடுக்கு திரும்பி வந்த தாயும், சகோதரியும், கௌசிக் கண்ணன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே, இதுகுறித்த தகவல் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கௌசிக் கண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அக்கம்பக்கத்தினர், பள்ளி மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் பகுதியில், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
