செய்திகள் :

சிலிண்டர் விலை உயர்வு: ``இந்த நேரத்திலாவது திமுக சொன்னதை செய்ய வேண்டும்'' - தவெக விஜய் சொல்வதென்ன?

post image

கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை நேற்று திடீரென ரூ.50 உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலையும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்திருக்கிறது.

இந்த விலை உயர்விற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

சிலிண்டர் விலை
சிலிண்டர் விலை

தவெக தலைவர் விஜய் கண்டனம்:

அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை:

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு, மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்?

`திமுக-வின் பொய் வாக்குறுதி'

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்தப் போக்கைத் தி.மு.க அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள். பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பா.ஜ.க அரசும் தி.மு.க அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.

சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் தி.மு.க அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

சமையல் எரிவாயு

மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தி.மு.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட். இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடா... மேலும் பார்க்க

`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர... மேலும் பார்க்க

சீனா: `இந்திய நண்பர்களே!' அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. 'பரஸ்பர வரி' விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது. பரஸ்பர வரிக்கு எதிர்ப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்திபுண்... மேலும் பார்க்க

`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடு... மேலும் பார்க்க