செய்திகள் :

`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி

post image

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன? பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.

ஏன் அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் இஷ்டம். எங்கள் கூட்டணியை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை, தகுதி இல்லை. எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை எல்லாம் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சி இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி" என்று அமித்ஷா கூறியிருக்கிறார்." என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட். இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடா... மேலும் பார்க்க

சீனா: `இந்திய நண்பர்களே!' அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. 'பரஸ்பர வரி' விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது. பரஸ்பர வரிக்கு எதிர்ப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்திபுண்... மேலும் பார்க்க

`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடு... மேலும் பார்க்க

`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்... மேலும் பார்க்க