`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.
.jpg)
இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ்மித்தல், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அமர்வு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும் இரு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கவர்னருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மொழியாக்கம் கிடைக்கப் பெற்ற உடனே, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிகோரி தமிழ்நாடு அரசு கடிதம் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக கவர்னரின் ஒப்புதலையடுத்து ஓரிரு நாள்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் உள்மாவட்ட அ.தி.மு.க. வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
