சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
ஏர்டெலில் புதிய திட்டம் அறிமுகம்!
பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய பயனர்களுக்கு புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டத்தில் 3 மாத ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் 50 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் ரீசார்ஜ் தொகை ரூ. 451 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 90 நாள்கள் சேவை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு வாய்ஸ் மற்றும் மெசேஜ் சலுகைகள் கிடையாது. ஆகையால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிப்படை திட்டம் அவசியம்.
மற்ற ஓடிடி திட்டங்கள்
ஏற்கெனவே ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய இரண்டு டேட்டா திட்டங்கள் ஏர்டெலில் உள்ளன.
ரூ. 100 - 5 ஜிபி டேட்டா + ஜியோ ஹாட்ஸ்டார் - 30 நாள்கள்
ரூ. 195 - 15 ஜிபி டேட்டா + ஜியோ ஹாட்ஸ்டார் - 90 நாள்கள்
இதேபோன்ற டேட்டாவுடன் கூடிய ஓடிடி சந்தா திட்டங்கள் போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் விஐ-யும் வழங்கி வருகின்றன.
ஜியோவில் ரூ. 100-க்கு 90 நாள்களுக்கு 5 ஜிபியுடனும் ரூ. 195-க்கு 90 நாள்களுக்கு 15 ஜிபியுடனும் ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கப்படுகிறது.
அதேபோல், விஐ-யில் ரூ. 101, ரூ. 151 மற்றும் ரூ. 161 ஆகிய திட்டங்களில் டேட்டாவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.