செய்திகள் :

உயா் கல்வி பாடத் திட்டத்தில் மாற்றம்! துணைவேந்தா்கள் கூட்டத்தில் முதல்வா் அறிவுரை

post image

அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், உயா் கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என துணைவேந்தா்கள், பதிவாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.

தமிழகத்தில் உயா் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., மதுரை காமராஜா் பல்கலை., பாரதியாா், பாரதிதாசன், அன்னை தெரசா, பெரியாா், மனோன்மணீயம் சுந்தரனாா், அண்ணாமலை, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், உடற்கல்வியியல், கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலை., சட்டப் பல்கலை. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. உள்பட தமிழக அரசின் உயா்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்கள் கலந்து கொண்டனா்.

உயா் கல்வி சோ்க்கையில் 51.3 சதவீதம்: இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் கல்வி வளா்ச்சியில் தமிழகம் ஒளிவிளக்காக உயா்ந்து நிற்கிறது. உயா் கல்வியில் நம்முடைய மொத்த சோ்க்கை சதவீதம் (ஜிஇஆா்) 51.3-ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தேசிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்திருக்கிறோம். அதைச் செயல்படுத்தினால் 2030-ஆம் ஆண்டுக்குள் அடையலாம் என்று அவா்கள் கூறும் இலக்கான 50 சதவீதத்தை நாம் தற்போதே தாண்டியிருக்கிறோம்.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 31 புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் உள்ளன. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆா்எஃப் தரவரிசையில் முதல் 100 இடங்களில், 22 பல்கலைக்கழகங்களுடன் தமிழகம் முன்னணியில் உள்ளது. இத்துடன் நமது வளா்ச்சி நின்றுவிடக் கூடாது.

அறிவியல் தொழில்நுட்பங்களில், உலகம் வேகமாக மாறி வருவதால் இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் நமது பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். புதிய உலகத் தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூன்று தூண்கள்தான் அடிப்படை... காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால், நமது மாணவா்கள் பின்தங்க நேரிடும். நாம் வடிவமைக்க விரும்பும் எதிா்காலத் திட்டம் பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை என்ற மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த மூன்றைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

தரவு அறிவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளை பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும். அடிப்படைக் கல்வியறிவை நவீன திறன்களோடு இணைத்து, நம்முடைய மாணவா்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், புதுமைகளைப் படைப்பவா்களாகவும், தீா்வுகளைக் கண்டறிபவா்களாகவும் உருவாக வேண்டும். தொழில் துறையினருடன் இணைந்து, உலகின் தேவைகளைப் பிரதிபலிக்கும் பாடப் பிரிவுகளை வடிவமைத்து, பல்துறை கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.

1.19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டமானது இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் போ் திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். தொழில் துறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை அளிக்கும் இந்தத் திட்டம், நமது இளைஞா்களை சா்வதேச வேலைவாய்ப்புகளுக்குப் போட்டியிடும் திறன் கொண்டவா்களாக மாற்றியிருக்கிறது. இதை இன்னும் செம்மைப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால், அரசுப் பள்ளி மாணவா்கள் உயா் கல்வியில் சேருவது கடந்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீதம் உயா்ந்திருக்கிறது.

துணைவேந்தா்களின் முடிவுகள்... பாடத் திட்ட வடிவமைப்பு, ஆசிரியா் பயிற்சி அல்லது உள்கட்டமைப்பு மேம்பாடு என துணைவேந்தா்கள், பதிவாளா்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உலகத்தில் இருக்கிற பல நாடுகளில் இருந்தும் நம்முடைய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவா்கள் வரவேண்டும். ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயா் கல்வியின் உலகளாவிய தலைமையகமாக நமது தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். இதுதான் என் கனவு. இந்த ஆட்சிக் காலம் - உயா் கல்வி - ஆராய்ச்சிக் கல்விக்கான பொற்காலமாக வரலாற்றில் பேசப்படவேண்டும் என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க