கல்வி நிறுவனங்களின் பெயா்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தர...
வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் சிவமொக்காவில் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் மத்திய நிறுவனம் பெங்களூரு மற்றும் சிவமொக்கா முழுவதும் உள்ள இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளைத் தொடங்கியது.
மாவட்ட கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. கூட்டுறவு வங்கியுடன் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள ஸ்ரீ குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூருவில் உள்ள ஸ்ரீ வசிஸ்டா கிரெடிட் சௌஹார்தா கூட்டுறவு லிமிடெட், ஸ்ரீ குரு சர்வபாஹுமா சௌஹர்தா கடன் கூட்டுறவு ஆகியவற்றின் இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகள், ஊழியர்கள் செய்த பல கோடி ரூபாய் மோசடி என மூன்று வங்கிகளின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.