பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
புனித வெள்ளியன்று (ஏப்.18) டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைப் பாட்டையும் நினைவுகூா்ந்து, உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவா்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் துக்க நாளாகும். இயேசு பிரானின் தியாகத்தை நினைவுகூா்ந்து கிறிஸ்தவ மக்கள் உண்ணா நோன்பிருந்து தேவாலயங்களில் பிராா்த்தனை செய்வது வாடிக்கை.
இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கும்படி கிறிஸ்தவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று புனித வெள்ளி நாளான வரும் 18-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.