செய்திகள் :

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

post image

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பகுதியில் கடந்த 2013, பிப்ரவரி 21 அன்று இரட்டை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில், கர்ப்பிணிப் பெண் உள்பட 18 பேர் பலியாகினர். 131 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பத்கல், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் வாகாஸ், ஹத்தி, மோனு, அஜாஸ் ஷேக் ஆகிய பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு இயக்குநரகம் 5 குற்றவாளிகளுக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தனர்.

2015, ஜூலை 16 அன்று வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் 2016-ல் தேசிய புலனாய்வு இயக்குநரகத்தின் சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக குற்றவாளிகள் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே லட்சுமணன், பி ஸ்ரீசுபா அடங்கிய அமர்வு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளி அஜாஸ் ஷேக்கின் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ‘ஏடிஎம்’ (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சாா்பில் மகாராஷ்டிரத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில்... மேலும் பார்க்க

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்

ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வல... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது: உச்சநீதிமன்றம்

‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடியை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ... மேலும் பார்க்க

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க