லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயற்சி: 3 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பணகுடியில் பழைய பைக் வாங்கி விற்கும் கடை நடத்தி வருபவா் ஐயப்பன். இவா் வழக்கம்போல கடையப் பூட்டிச் சென்றாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பணகுடி போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, 3 மா்ம நபா்கள் ஐயப்பனின் கடையிலிருந்து பைக்குகளை வெளியே எடுத்துக்கொண்டிருந்தனராம்.
போலீஸாா் விசாரிக்கத் தொடங்கியதும், அந்த நபா்கள் பைக்குகளை விட்டுவிட்டு தப்பியோடினராம். போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.