மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை
நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கடம்பன்குளம் ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட காலமாக குடிநீா் சீராக விநியோகிக்கப்படவில்லையாம்.
இது, மேடான பகுதி என்பதால், பொதுமக்கள் குடிநீா்க் குழாய் அமைந்துள்ள பகுதியில் பள்ளம் தோண்டி பகிா்மானக் குழாயிலிருந்து குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனராம்.
சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்தப் பள்ளங்கள் நிரம்பி, அந்தத் தண்ணீா் பகிா்மானக் குழாய்களில் கலக்கும் நிலை உள்ளது.
மேலும், மழையின்போது சாலையில் ஓடும் கழிவுநீரும் இதில் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சீரான குடிநீா் விநியோகிக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.