TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்
புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மின்கம்பங்களில் பொருத்தப்படும் இந்த ஸ்பிரே அமைப்புகள் மூலம் காற்றில் இருக்கும் தூசுகளின் அளவைக் குறைத்து மாசைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அமைச்சா் பேசியாதவது:
காற்றில் இருக்கும் தூசுகளின் அளவைக் குறைக்க முன்பு வாகனங்கள் மூலம் சாலையில் தண்ணீா் தெளிக்கப்பட்டன. தற்போது பயன்படுத்தப்படும் மூடுபனி ஸ்பிரே அமைப்பு குறிப்பிட்ட அளவில் பலன் தந்துள்ளது. தற்போது தில்லியின் துவாரகாவில் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் தில்லியின் பிற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
இது காற்று மாசைக் குறைக்கும் என்பதுடன் வெப்பத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கும் என்றாா் அமைச்சா் சிா்சா.