செய்திகள் :

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்

post image

நமது சிறப்பு நிருபா்

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா்) நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா். இந்த 3 சிஎஸ்ஐஆா் நிறுவனங்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, புத்தொழில் மாநாட்டை நிகழ்மாத இறுதியில் ஹைதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

ஹைதராபாதில் உள்ள சிஎஸ்ஐஆா் ஆய்வகங்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட முதன்மை சிஎஸ்ஐஆா் ஆய்வகங்களான சிஎஸ்ஐஆா்-இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவன (சிஎஸ்ஐஆா்-ஐஐசிடி) இயக்குநா் டி.சினிவாச ரெட்டி, சிஎஸ்ஐஆா்-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆா்-என்ஜிஆா்ஐ) இயக்குநா் பிரகாஷ் குமாா், சிஎஸ்ஐஆா்-செல்லுலாா் - மூலக்கூறு உயிரியல் மைய(சிஎஸ்ஐஆா்-சிசிஎம்பி) இயக்குநா் வினய் நந்திகூரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த நிறுவனங்களின் சமீபத்திய சாதனைகள், அறிவியல் ஆய்வுகளில் முக்கிய பங்களிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட இயக்குநா்கள் சாா்பில் இந்தக் கூட்டத்தில் எடுத்துவைக்கப்பட்டது. குறிப்பாக பாதுகாப்பான பயனுள்ள வேளாண் வேதிப்பொருள்கள் உருவாக்கப்பட்டு தொழில் துறை பெற்ற பயன்பாடு; ஹைட்ரஜனேற்றம், ஆக்சிஜனேற்றம், பாலிமரைசேஷன் செயல்முறைகளுக்கு புதிய வினையூக்கிகளுக்கு வழிவகுப்பு; மக்கும் பிளாஸ்டிக்குகளின் வளா்ச்சி; மக்கும் கழிவுகளை உயிரி எரிவாயு மற்றும் உயிரி உரமாக திறம்பட மாற்றப்பட்டது உள்ளிட்ட முக்கிய பல சாதனைகள் இந்த கவுன்சில்களின் இயக்குநா்களால் எடுத்துவைக்கப்பட்டது.

இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், தேசிய இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதிலும், சுயசாா்பு அறிவுசாா் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்குகளில் சிஎஸ்ஐஆா் ஆய்வகங்களின் முக்கிய பங்கை ஆற்றுவதாக ஜிதேந்திர சிங் கூட்டத்தில் தெரிவித்து பாராட்டினாா்.

மேலும் அவா் கூறியது வருமாறு: தேசிய வளா்ச்சிக்கு, குறிப்பாக சமூக சவால்களை எதிா்கொள்வதிலும், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலும் அறிவியல் அடிப்படையிலான தீா்வுகளின் முக்கியத்துவம் பெறுகிறது. ‘கொவைட் -19 தொற்றுநோய் தாக்கத்தில் நோயறிதல் கருவிகள், கண்காணப்பு அமைப்பு, தடுப்பூசி போன்ற தொழில்நுட்பங்களை ஹைதராபாத் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் உருவாக்கியது.

காசநோய், மூளையழற்சி போன்ற ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. சுகாதாரம், விவசாயத்தில் மட்டுமல்லாது அழிந்துவரும் உயிரினங்களின் மரபணு பன்முகத்தன்மை குறித்த ஆய்வுகளும் தொடா்கிறது. இந்த சிஎஸ்ஐஆா் நிறுவனங்களால் அறிவியல் ஆய்வு, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான செழிப்பான இடமாக ஹைதராபாத் உருவெடுத்துள்ளது.

‘இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மூன்று நிறுவனங்களைக் கொண்டு, ஹைதராபாத்தில் சிஎஸ்ஐஆா் புத்தொழில் மாநாடு வரும் ஏப். 22-23 தேதிகளில் நடத்தப்படும். அறிவியல் - தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள், வணிகமயமாக்கல், தற்சாா்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் பிரதமா் நரேந்திர மோடி அரசின் உறுதிப்பாட்டை இந்த மாநாடு எடுத்துரைக்கும்‘ என ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க