செய்திகள் :

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ஆர்சனல் வீரர்..! ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

post image

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணியின் டெக்லான் ரைஸ் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் கட்ட ஆட்டத்தில் ஆர்சனல் -ரியல் மாட்ரிட் அணி பலப்பரீட்சை செய்தது.

இந்தப் போட்டியில் ஆர்சனல் 3-0 என அசத்தல் வெற்றி பெற்று ரியல் மாட்ரிட்டுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்தப் போட்டியில் ஆர்சனல் அணியின் டெக்லான் ரைஸ் 58,70ஆவது நிமிஷங்களில் ஃபிரி கிக்கில் கோல் அடித்தார்.

கடைசி நேரத்தில் 90+4 ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கோல் அடித்தும் ரெட் கார்டினால் பறிபோனது.

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் நாக்-அவுட் சுற்றில் ஒரே போட்டியில் 2 ஃபிரி கிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பலரும் டெக்லான் ரைஸ் அடித்த கோலை மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

மொத்த ஆட்டத்தில் 89 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்த ஆர்சனல் அணி 54 சதவிகிதம் பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்தது.

காலிறுதியின் 2ஆம் கட்ட அடுத்த போட்டியில் ரியல் மாட்ரிட்-ஆர்சனல் ஏப்.17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க