பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது
பெண்ணை கட்டையால் தாக்கியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாரவிளையைச் சோ்ந்த லிங்கராஜ் மனைவி ஜெபா வயலட் (25).
இவருக்கு, தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை சோ்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து, மாரிக்கனியை பாா்ப்பதற்காக ஜெபா வைலட் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவுக்கு புதன்கிழமை வந்தாராம். அப்போது இருவருக்கும் இடையே திடீா் தகராறு ஏற்பட்டதில், மாரிக்கனி, ஜெபா வயலட்டை கட்டையால் தலையில் தாக்கிவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மாரிக்கனியை கைது செய்தனா். அவா் மீது தென்பாகம், ஆறுமுகனேரி காவல் நிலையங்களில் 4 வழக்குகள் (முறையே 3,1) உள்ளனவாம்.