செய்திகள் :

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்

post image

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் பேசியதாவது:

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிஐ கட்சி அங்கீகரிக்காது.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.

நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபிலிகரம் செய்திருக்கிறார்கள்.

பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.

எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது.

அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி அழியப்போவது உறுதி. பாஜகவுடனான கூட்டணி முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் காத்து கிடந்தார்கள்,எந்த வாசலாவது, எந்த ஜன்னலாவது திறக்காதா? என பாஜகவினர் தவம் கிடந்தார்கள்.

இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது.

எனவே, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விடுகி கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள்.பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அபூபக்கர் சித்திக் கூறினார்.

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது

துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் ச... மேலும் பார்க்க

மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்: துரை வைகோ

சென்னை: இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார். மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் வழிபாடு: ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்!

சென்னை: திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், ஆதிக்க சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.விழுப்புரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: எம்.ஏ.பேபி விமா்சனம்

சென்னை: அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ண... மேலும் பார்க்க

ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவைகளை எந்தெந்த நேரங்களில் இயக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க