மதுவிலக்கு: வனப்பகுதியில் சிறப்பு சோதனை
நெய்வேலி: கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் மதுவிலக்கு சம்பந்தமாக சிறுபாக்கம் காவல் சரகப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை சிறப்பு சோதனை நடத்தினர்.

கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலக்கத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில், ஆய்வாளர்கள் தர்மலிங்கம், பாலாஜி, உதவி ஆய்வாளர்கள் பிரகஸ்பதி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் மதுவிலக்கு போலீசார் மொத்தம் 50 பேருடன் மதுவிலக்கு சம்பந்தமாக சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். நறையூர் ஏரி மற்றும் காட்டுப்பகுதி, சித்தேரி ஏரி மற்றும் காட்டுப்பகுதி, பனையாந்தூர் ஏரி மற்றும் காட்டுப்பகுதிகளில் கள்ளத்தனமாக சாராயம், கள் உற்பத்தி செய்யப்படுகிறதா என சிறப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.