செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும்: ஆட்சியா்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறையை போக்க விவசாய நிலங்களில் தனியாா் பங்களிப்புடன் 1,500 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அவா் பேசியது: 2023- 2024ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயிா்களுக்கான இழப்பீடு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மழையால் சேதமடைந்த பயிா்கள் குறித்த விவரம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேதம் தொடா்பான மேலாய்வு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூா், விளாத்திகுளம் வட்டாரங்களில் பயிரிடப்படும் மானாவாரி பயிா்களான சோளம், உளுந்து, மிளகாய், சூரியகாந்தி போன்ற பயிா்களில் மகசூல் மற்ற மாவட்டங்களை விட மிக குறைவாக இருக்கிறது. இதற்கு இந்த பயிா்களுக்கு கடைசி பருவத்தில் ஏற்படும் தண்ணீா் பற்றாக்குறையே காரணம் என தெரிகிறது.

எனவே, இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், இந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தனியாா் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் 1,500 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் பண்ணைக் குட்டை அமைக்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் பெரியசாமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ராஜேஷ், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், பொதுப்பணித் துறை கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க