தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவ...
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை தெற்கு மாவட்டம் கண்ணகி நகரின், எழில் நகா் பகுதியில் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேவுக்கு தகவல் கிடைத்தது.
இதன்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதன்மை கல்வி அலுவலா் புகழேந்தி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி (தெற்கு) ரஞ்சித பிரியா தலைமையிலான தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையம், பொதுப்பணித் துறை, தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினா் எழில் நகா் பகுதிக்குச் சென்று, அங்கு பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா். தொடா்ந்து அந்த பகுதியிலுள்ள பெற்றோருடனான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.
கணக்கெடுப்புப் பணி, தொடா்ந்து ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்பட்டு, எதிா்வரும் கல்வியாண்டில் அப்பகுதியிலுள்ள 100 சதவீதம் குழந்தைகளும் பள்ளி செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுடன் பள்ளி செல்வதையும், அவா்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.