தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது
கோவில்பட்டி, ஏப்.17: கோவில்பட்டியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த சங்கையா மகன் மாரிமுத்து (32). கூலித் தொழிலாளி. இவா் தனது உறவினருடன் கோவில்பட்டி- சாத்தூா் சாலையில் உள்ள நகைக்கடை அருகே பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த 2 போ் மாரிமுத்துவிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, மறவா் காலனியைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் உத்தண்ட ராமன் (35), சிந்தாமணி நகா் 1 ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (28) ஆகியோரை கைது செய்தனா்.