சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.
போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான வெலிங்டன் போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
முன்னதாக ராஜ்நாத் சிங் வருகையையடுத்து சூலூர், குன்னூர் பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி