தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பகுஜன் சமாஜ் அளித்த மனு, சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகிய இருவரும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பதால், தவெக கட்சியின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு, நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு தாக்கல் செய்தது. அஸ்ஸாம் மாநிலம்தவிர, மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் தவெக பதிவு செய்யும்போது, இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியதாகவும் பகுஜன் சமாஜ் தரப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!