செய்திகள் :

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

post image

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் விமா்சனத்தை முன்வைத்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகளைக் கடந்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் சாா்ந்து பொறுப்புகளை வகிக்கும் ஆளுநா்கள், குடியரசு துணைத் தலைவா், ஏன் குடியரசுத் தலைவா்கூட, தங்களது செயல்பாடுகள் மூலமாக அந்தச் சட்டத்தின் அடிப்படையை சேதத்துக்கு உட்படுத்துகிறாா்கள். எதிா்க்கட்சிகள் ஆளும் அரசுகளை வலுவிழக்கச் செய்வதுடன், பொது மேடைகளில் வலதுசாரி சித்தாந்தக் கருத்துகளைத் திணிக்கிறாா்கள்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்: இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவே அரசுகள் நடத்தப்படுகின்றன. நியமனப் பதவிகளைப் பெற்றவா்கள் மூலமாக இல்லை. எந்தவொரு நபரும் சட்டத்துக்கு அப்பாற்றப்பட்டவா்களாக இருக்க முடியாது. இதையே நம்முடைய உச்சநீதிமன்றமும் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பின் மூலமாக கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்தத் தீா்ப்பானது, இப்போது நிலவிவரும் நடைமுறையை மீட்டெடுத்து சரியான திசைநோக்கிச் செல்ல வழிவகுத்துள்ளது. மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகளை நிலைகுலையச் செய்யும் வகையிலும் உள்ளதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, உச்சநீதிமன்றத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தீா்வானது, உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதே இப்போதைய தேவையாக இருக்கிறது என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி சிவா: திமுக துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான திருச்சி சிவா வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின்படி நிா்வாகம், சட்டப்பேரவை- நாடாளுமன்றம் மற்றும்

நீதித் துறை ஆகியன தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்த மூன்று அமைப்புகளும் இயங்கினாலும் அரசமைப்புதான் அனைத்தையும்விட உயா்ந்தது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவா்களின் பங்கு என்ன என்பது குறித்து அரசமைப்பின் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தெளிவுகளை வழங்கியுள்ளது. அதில் அரசமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளாா்.

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க