சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
எரிச்சலடைச் செய்யும் சிஎஸ்கே ஃபீல்டிங்..! பயிற்சியாளர் ஃபிளெமிங் ஆதங்கம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது.
இது குறித்து ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இதுவரை சிஎஸ்கே அணிக்கு எரிச்சலடையச் செய்யும் சீசனாகவே இருந்து வருகிறது. கேட்ச்சிங்கிலும் மோசமாக செயல்பட்டார்கள். கடைசி போட்டியில் இரண்டு அணிகளுமே அப்படித்தான் இருந்தன.
11 கேட்ச்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே
இதுவரை நடந்த சிஎஸ்கே போட்டிகளில் எது வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயமாக அது ஃபீல்டிங்தான். அதை சரிசெய்தே ஆக வேண்டும்.
கேட்ச்சுகளை சரியாக பிடிப்பது மூலமாக 20 ரன்களை கட்டுப்படுத்தலாம்.
சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 11 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளன. அதில் 3 கேட்ச்சுகள் பஞ்சாப் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கில் முன்னேற்றம் இருக்கிறது, ஆனால்
நல்ல விஷயம் என்னவென்றால் முன்பை விட நல்ல பேட்டிங் ஆடினார்கள். தொடக்க வீரர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வரத் தொடங்கியுள்ளது.
மிடில் ஆர்டரில் ரன் ரேட்டை தக்கவைக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் மிகவும் அதிகமான ரன்களை அடிக்க வேண்டியுள்ளது.
ஆட்டத்திலே இல்லாமல் இருப்பதற்கு பதிலாக சற்று ஆட்டத்தில் இருந்தது நல்ல விஷயமாக பார்க்கிறேன். ஃபீல்டிங்கில்தான் அது கோட்டைவிடப்பட்டது என்றார்.