ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!
தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து
தில்லியில் இரு வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனித்தனி தீ விபத்துகள் பதிவாகின.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இரண்டு நிகழ்வுகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.
முதல் தீ விபத்து சம்பவம் ஷாதராவின் கீதா காலனி பகுதியில் உள்ள ஒரு சொஸைட்டி அருகிலுள்ள பூங்காவில் மாலை 6.24 மணியளவில் ஏற்பட்டது.
இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அருகிலுள்ள சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தடுத்தனா்.
இரண்டாவது சம்பவம் சிறிது நேரத்திலேயே ஷஹீன் பாக் பகுதியில் நிகழ்ந்தது. அங்கிருந்த ஒரு காலி நிலத்தின் புதா்களில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக மாலை 6:37 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்ததும் உடனடியாக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்தவொரு காயமோ அல்லது பெரிய சேதமோ இல்லாமல் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தீா்மானிக்கப்படாத நிலையில், வட தாவரங்கள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.