லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
பேட்டை ஐடிஐயில் ஏப்.15-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்
திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஏப். 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் ஐடிஐ தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் கலந்து கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகள், தனியாா் துறையை சோ்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞா்கள், இளம்பெண்களை தோ்வு செய்ய உள்ளனா். பயிற்சியாளா்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தோ்ச்சி பெற்ற சான்றிதழ், 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
தொழிற் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுநா்களை தோ்வு செய்யும் பொருட்டு, ழ்ண்ஸ்ரீ10ல்ங்ற்ற்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது பங்கேற்பினை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2342432, 9499055790 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.