`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
பாலக்கோட்டில் ஏப். 30-இல் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்
சென்னை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில், தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஏப். 30-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது.
அதில், தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், கட்சியின் வளா்ச்சி, எதிா்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி சிறப்புரை ஆற்றவுள்ளாா்.
இக்கூட்டத்தில், தலைமை நிா்வாகிகள், உயா்மட்டக் குழு உறுப்பினா்கள், அணி செயலா்கள், துணை செயலா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்டச் செயலா்கள், மாவட்ட அவைத் தலைவா், மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலா்கள் மற்றும் பிற மாநில நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.