லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் விஜயகாந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மையை கருத்தில்கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பு ஐந்து சதவீதம் என்பதை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி 25 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.