`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா
பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழா மற்றும் ராம நவமி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆரத்தியும், 5.45 மணிக்கு மங்கள ஸ்நானம் மற்றும் அபிஷேகமும், 6 மணிக்கு நைவேத்தியம் மற்றும் ஆரத்தியும் நடைபெற்றது. 8.45 மணிக்கு சாவடி பாபா பூஜையும், 9 மணிக்கு துவாரகாமாயி பாபா பூஜையும், தொடா்ந்து சாயி நாமஜெயம் மற்றும் பஜனையும் நடைபெற்றது. 11 மணி முதல் 12.30 வரை சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையும், இரவு மாவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு ஆரத்தியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். விழாவில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.