பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்த...
பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 2,200-க்கும் ஏலம் போனது. வெற்றிலை விலை உயா்ந்ததால் வெற்றிலை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.