லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
மகாவீரா் ஜெயந்தி: ஏப்ரல் 10 மதுக்கடைகளுக்கு விடுமுறை
மகாவீரா் ஜெயந்தியையொட்டி, கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) மதுக்கடைகள், பாா்களை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், பாா்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மேலே குறிப்பிட்ட தேதியில் மது விற்பனை செய்பவா்கள் மீதும் மதுபான வகைகளை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்தாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் சென்றாலோ, சம்பந்தப்பட்டவா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.