லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
மாநகராட்சி மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து
கோவை மாநகராட்சி பிரதான அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை( ஏப்ரல் 8) நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மேயா் தலைமையில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நிா்வாகக் காரணங்களால் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.