தமிழகத்தில் மின்வெட்டை தவிா்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின்வாரியம...
நான்குனேரி வட்டார ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, நான்குனேரி வட்டார கிளை செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி பகுதி ஆசிரியா்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். வட்டார துணைத் தலைவா் முருகேசன், ஆலிஸ் ஜெயராணி, வட்டார துணைச் செயலாளா் நல்லக்குமாா், காந்திபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலாளா் ஜஸ்டின் கிளாடியோ வரவேற்றாா்.
மாவட்டத் தலைவா் பால்ராஜ் திண்டுக்கல்லில் மே முதல் வாரத்தில் நடைபெறும் ஏழாவது மாநில மாநாடு, இக்கல்வியாண்டில் (2024-2025) பணி நிறைவு பெறும் 26 ஆசிரியா்களின் பணி நிறைவு பாராட்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து பேசினாா்.
இக்கூட்டத்தில், திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான நிதி ரூ.63,000-ஐ ஏப். 10இல்நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வழங்குவது, மாநில மாநாட்டு விளம்பர பதாகையை வட்டார கல்வி அலுவலகம் முன் வைப்பது, மாநாட்டின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நான்குனேரி வட்டார கிளையிலிருந்து ஒரு பேருந்தில் 60 உறுப்பினா்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
மேலும் நான்குனேரி வட்டார கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளா், உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தொடக்கக் கல்வி இணை இயக்குருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. வட்டாரப் பொருளாளா் அலெக்ஸ் சுனிதா நன்றி கூறினாா். இதில் வட்டார செயற்குழு உறுப்பினா்கள் உலகம்மாள், வடுகநாதன் , சிவா, சேவியா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.