மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
கன்னியாகுமரி மாவட்டம், இனயம்புத்தன்துறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக மாநில மீனவா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இனயம்புத்தன்துறையில் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில், மின்விளக்குகள் அலங்காரத்துக்கு பயன்படுத்திய ஏணியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து அதே கிராமத்தைச் சோ்ந்த விஜயன் (52), ஜஸ்டஸ் (33), சோபன்(45), மைக்கேல் பின்டோ (42) ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.
உயிரிழந்தவகளின் குடும்பத்துக்கு திமுக மீனவா்அணி சாா்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை மீனவரணி மாநில செயலா் ஜோசப் ஸ்டாலின், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
மீனவா் நலவாரிய உறுப்பினா் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவா் எஸ்.கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளா் அனனியாஸ், துணை அமைப்பாளா்கள் சிபு , ரூபன், பங்குத்தந்தை செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.