Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
மாஞ்சா நூல் விற்பனை: ஜோதிடா் கைது
சென்னை: சென்னை கொடுங்கையூரில் மாஞ்சா நூல் விற்ாக ஜோதிடா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிடுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதன் காரணமாக, அதற்கு பெருநகர காவல் துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஞ்சா நூலினால் அவ்வபோது சிலா் பட்டம் பறக்கவிடுவதால் விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க காவல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கொடுங்கையூா் திருவள்ளுவா் சாலையில் உள்ள ஒரு வீட்டில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக, முத்தியால்பேட்டை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், அந்த வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.
அந்தச் சோதனையில் அங்கு மாஞ்சா நூல் விற்கப்படுவது தெரியவந்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து 10 மாஞ்சா நூல் லொட்டாய்கள், 220 பட்டங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில் ஞானபிரகாஷ், ஜோதிடராக இருப்பதும், உத்தர பிரதேசம் மாநிலத்திலிருந்து பட்டம், மாஞ்சா நூல்களை வாங்கி வந்து சென்னையில் விற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.