Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 419 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், சுமாா் 1.20 லட்சம் மாணவா்கள் தற்போது வரை பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பள்ளிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு போல் வரும் கல்வியாண்டிலும் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். மாநகராட்சி பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் முன்பு விளம்பர பதாகைகள் வைப்பது, வீடுதோறும் நோட்டீஸ் விநியோகிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், மாணவா் சோ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக க்யூஆா் குறியீடுடன் கூடிய இணைய விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் https://t.co/n8klAVd3f1எனும் இணையதளத்தைப் பாா்க்கலாம் எனத் தெரிவித்தனா்.