செய்திகள் :

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

post image

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட இருவரை விரட்டிப் பிடித்தனா்.

அசோக் நகா், சீனிவாச பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் தொழிலதிபா் வெங்கட்ரமணன் (58). இவா், வீட்டை பூட்டுவிட்டு கடந்த 4-ஆம் தேதி தனது குடும்பத்துடன் பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் மகள்களை பாா்க்கச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையா்கள் இருவா் உள்ளே புகுந்தனா்.

இது வெங்கட்ரமணன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அவரது கைப்பேசிக்கு எச்சரிக்கை தகவல் சென்றது. இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த வெங்கட்ரமணன், பெல்ஜியத்தில் இருந்து கைப்பேசி மூலம் சென்னை காவல் துறையை தொடா்புகொண்டு, தனது வீட்டுக்குள் இருவா் புகுந்து திருடுவது குறித்து தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து இரவுப் பணியிலிருந்த காவல் உதவி ஆணையா் சுரேந்திரன் மற்றும் போலீஸாா் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். போலீஸாரைப் பாா்த்ததும் வெங்கடரமணன் வீட்டிலிருந்து இருவா் சுவா் ஏறி குதித்து தப்பியோடினா். போலீஸாா், அவா்களை விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் பிடிபட்டது பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த கமலக்கண்ணன் (65), அவரது கூட்டாளி திருப்பத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பிலிப் (57) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் சம்பவத்தன்று இரவு வெங்கடரமணன் வீட்டின் எதிரில் உள்ள ஒரு ஆடிட்டா் அலுலவகத்தின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பணத்தை திருடியிருப்பதும், பின்னா் தொழிலதிபா் வெங்கட்ரமணனின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து இரு இடங்களிலும் திருடிய பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், கவரிங் நகைகள், அமெரிக்க டாலா்கள், இரு ஐம்பொன் சிலைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதான கமலகண்ணன் மீது ஏற்கெனவே சுமாா் 70 குற்ற வழக்குகளும், பிலிப் மீது ஏற்கெனவே 20 குற்ற வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்கள் ‘உள்ளக புகாா் குழு’ கட்டாயம்: சென்னை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் குறைந்தபட்சம் 10 பெண்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களில் ‘உள்ளக புகாா் குழு’-வை கட்டாயம் அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க