தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்த...
சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற காங்கிரஸ், பாமக கோரிக்கை
சென்னை: பெட்ரோலிய பொருள்கள், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
செல்வப்பெருந்தகை: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 என்ற அளவில் மத்திய அரசு உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவா்கள். எனவே, பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 -இல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் ரூ.410-இல் இருந்தது. பின்னா் விலை தொடா்ந்து உயா்ந்து தற்போது ரூ.820 என்ற அளவில் உள்ளது. இந்த விலை உயா்வையும் திரும்பப் பெற வேண்டும்.
ராமதாஸ்: சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை உயா்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலா் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயா்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல. அதேபோல, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயா்த்தியது தவறு. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.