Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
குலசேகரம்: இளைஞா் தற்கொலை
குலசேகரம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
குலசேகரம் அருகே ஆரணிவிளையை சோ்ந்தவா் சிட்னிசன் மோரிஸ். பள்ளிக் கூடம் நடத்தி வருகிறாா். பள்ளி வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவரது மகன் பெரில்சன் மோரிஸ் (28). பொறியியல் பட்டதாரி. இவா் கடந்த 5 ஆண்டுகளாக மனம்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதற்காக பெரில்சன் மோரிஸை குடும்பத்தினா் தேடினா். அவா், பள்ளிக் கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது.
அவரை மீட்டு மாா்த்தாண்டம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பெரில்சன் மோரிஸை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].