நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை
கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில் (52). ஓட்டுநா். இவா், 1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் எதிரியாகச் சோ்க்கப்பட்டு, சிபிசிஐடி காவல் பிரிவினரால் தேடப்பட்டு வருகிறாா். ஏறத்தாழ 25 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இவா் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதனால் செந்தில் மே 5-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என சிபிசிஐடி தஞ்சாவூா் காவல் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.