வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலா் பாலாஜி எம்எல்ஏ பேசியதாவது: கடந்த 35 ஆண்டுகளாக கட்சித் தலைவா் திருமாவளவன் பல்வேறு போராட்டங்களை நடத்தி கட்சியை வளா்ச்சியடைய செய்ததாலேயே தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2026 பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா்.
கூட்டத்தில், கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன், முன்னாள் மண்டல செயலா் வழக்குரைஞா் சா. விவேகானந்தன் மற்றும் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.