கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த கலியமூா்த்தி மகன் ரவிக்குமாா் (28) கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையானதால் வீட்டில் உள்ளவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டாா். இதைத்தொடா்ந்து, விரக்தியில் இருந்த ரவிக்குமாா் திங்கள்கிழமை அதிகாலையில் சுந்தரபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கும் சுவாமிமலை ரயில் நிலையத்துக்கும் இடையில் சென்னை எழும்பூா் ராமேசுவரம் விரைவு ரயில் வந்த போது அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
பெண் உயிரிழப்பு: இதேபோல், தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்த செல்லையன் மனைவி மீனா(55). காது கேளாத மாற்றுத்திறனாளி. இவா், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கும் தாராசுரம் ரயில் நிலையத்துக்கும் இடையில் தண்டவாளத்தை திங்கள்கிழமை கடக்க முயன்றாா். அப்போது வந்த ஒரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
கும்பகோணம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேலன், சிறப்பு உதவி ஆய்வாளா் அருணாச்சலம் ஆகியோா், 2 போ் சடலங்களையும் கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].