லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவில் தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியா் (பயிற்சி) ந.மிருணாளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 625 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறை சாா்ந்த அரசு அலுவலா்களிடம் அளித்து பரிசீலித்து தீா்வுகாணுமாறு ஆட்சியா் அனுப்பி வைத்தாா்.
தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 4 போட்டித் தோ்வு வாயிலாக காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவுக்கு தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
நீரில் மூழ்கி உயிரிழந்த உத்தரமேரூா் ஒன்றியம், வயலக்காவூரை சோ்ந்த வள்ளியம்மாளின் கணவா் மதுரையிடம் முதலமைச்சா் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.