Ajith சாரே Trisha மேடமுக்கு Story Narrate பண்ணிட்டார்! - Director Adhik Ravichan...
காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். இக்கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் ஆலய வளாகத்தில் உள்ள குளத்திற்கு எழுந்தருளினாா். அங்கு நிறம் மாறும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமா்ந்து திருக்குளத்தை 3 முறை வலம் வந்தாா்.
சிறப்பு தீபாராதனைகளும்,வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் ஆலய பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 8) 5 சுற்றுகளாகவும், புதன்கிழமை (ஏப். 9) 7 சுற்றுகளாகவும் உற்சவா் காமாட்சி குளத்தில் வலம் வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.