Ajith சாரே Trisha மேடமுக்கு Story Narrate பண்ணிட்டார்! - Director Adhik Ravichan...
ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலத்தில் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனை கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. விழா சனிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கலச புறப்பாடு நடைபெற்று வேத விற்பன்னா்கள் முன்னிலையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேதம் நடைபெற்றது.
இதையடுத்து ஸ்ரீநவநீத கிருஷ்ணா் படம் பிரதிஷ்டையும், மகா தீபாரதனை நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தண்டலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் தலைமையிலான விழா குழுவினா் செய்திருந்தனா்.