செய்திகள் :

MIvRCB: `இதுதான்டா சினிமா' - பாண்ட்யா vs பாண்ட்யா ஆட்டம்; ஆர்சிபி த்ரில் வெற்றி

post image

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் மோதிய ஐபிஎல் 18ஆவது சீசனின் 20ஆவது ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாசை வென்ற மும்பை இந்தியன்ஸ், முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்யச் சொன்னது. காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ராவுக்கு இது முதல் போட்டி என்பதால், பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

MI vs RCB

கோலியும் சால்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க, போல்ட் முதல் ஓவரை வீசினார். எடுத்த எடுப்பிலேயே 'டேஞ்சர் மேன்' பில் சால்ட்டை 4(2) ரன்களில், 'சால்ட் வாட்டர் சப்ப மேட்டர்' என்று ஸ்டம்புகள் சிதற வீழ்த்தி, சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார் ட்ரெண்ட் போல்ட். பவர்பிளேயில் அடுத்த விக்கெட்டைக் கொடுக்காமல், ஓவருக்கு இரண்டு அல்லது மூன்று பவுண்டரிகளை விரட்டி, 73-1 என்ற கம்பேக்கைக் கொடுத்தது படிக்கல்-கோலி ஜோடி. அதிலும், பும்ராவை எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸராகப் பறக்கவிட்டு மிரட்டினார் கோலி.

மலை போல ஏறி வந்த ரன் ரேட்டை பாண்ட்யா சற்றே கட்டுப்படுத்த, விக்னேஷின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டு, தனது அரைச்சதத்தைப் பதிவு செய்தார் விராட் கோலி. பார்ட்னர்ஷிப் சூப்பராகப் போய்க்கொண்டிருக்க, அதே ஓவரில் ஜாக்ஸ், லாங் ஆன் திசையில் படிக்கலை 37(22) ரன்களில் சிக்கவைத்தார். இதையடுத்து, 10 ஓவர் முடிவில் 100-2 என்ற வலுவான நிலையை எட்டியது ஆர்சிபி. இதன் பிறகு, "வைட் செல்லும் பந்துகளை விலகி விலகி அடிக்கத்தான் செய்வேன்" என்று சொதப்பத் தொடங்கினார் கோலி. ரன் ரேட் குறையத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட ரஜத் படிதார், சாண்ட்னரின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

MI vs RCB

ரன்மழையைக் கட்டுப்படுத்தும் விதமாக, 15ஆவது ஓவரில் கோலி 67(44) மற்றும் லிவிங்ஸ்டன் 0(2) ஆகிய இருவரையும், வைட் லைனில் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி, பெவிலியனுக்கு அனுப்பினார் பாண்ட்யா. ஆனால், அதன் பிறகு "அந்தப் பையனுக்கு பயமில்லை" என்ற மோடுக்கு நுழைந்த படிதார்-ஜிதேஷ் ஜோடி, பும்ராவைத் தவிர மற்றவர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தது. படிதார் 64(32) ரன்கள் எடுத்து அவுட் ஆக, "பும்ரா பால்லயும் அடிப்போம்" என ஜிதேஷ் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இன்னிங்ஸை முடிவு செய்தார். 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி.

ரோஹித் சர்மா-ரிகில்டன் ஜோடி, முதல் ஓவரிலிருந்தே பந்தை பவுண்டரிக்கு விரட்டத் தொடங்கினர். அதிலும், யஷ் தயாளின் பந்தைத் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளுக்கு விரட்ட, "இன்று ஹிட்மேனின் நாள்" என்று பேசி முடிப்பதற்குள், அடுத்த பந்திலேயே விக்கெட்டாகி வெளியேறினார் ரோஹித். இருந்தும், பவர்பிளேயின் கியரை மாற்றாமல், ரிகில்டன் அடித்து ஆடவே செய்தார். ஓவருக்கு பத்து ரன்கள் வீதம் தேவையான ரன்கள் வந்துகொண்டே இருந்தன. "குறுக்கே இந்த கௌஷிக் வந்தால்" என்று கட்டையைப் போட்டார் ஹசல்வுட். இரண்டு தொடக்க வீரர்களையும் இழந்து, 6 ஓவர் முடிவில் 54-2 என்ற நிலையில் இருந்தது மும்பை.

MI vs RCB

"காத்து மேல காத்து கீழ" என, சுயாஷ் சர்மா ஓவரில் பவுண்டரிகளைச் சேர்க்க முடியாமல், வில் ஜாக்ஸும் சூர்யகுமார் யாதவும் சுத்தல் வித்தையில் இறங்கி மரங்களை நட்டனர். அவர் உருவாக்கிய அழுத்தத்தை, 10ஆவது ஓவரில் வில் ஜாக்ஸ் 22(18) விக்கெட்டை வீழ்த்தி அறுவடை செய்தார் குருணல் பாண்ட்யா. 10 ஓவர் முடிவில் 84-3 என்ற நிலைக்கு வந்தது மும்பை. இந்தச் சூழலில், 23 மற்றும் 27 ரன்களில் குருணல் பாண்ட்யா மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரிடம் கேட்ச் ஆகாமல் தப்பித்தார் சூர்யா. அதிலும், ஜிதேஷ் சர்மாவும் யஷ் தயாலும் கையில் வந்த பழமான வாய்ப்பைத் தவறவிட்டனர். அதற்குப் பரிகாரமாக, அதே ஓவரில் ஸ்லோவர் பந்தை வீசி, சூர்யகுமாரை 28(26) ரன்களில் வெளியேற்றினார் தயால்.

இதன்பிறகு வந்த சுயாஷ் சர்மாவை திலக் வர்மா அட்டாக் செய்ய, குங் ஃபூ பாண்ட்யா ஜோஷ் ஹசல்வுட்டைப் பொளந்து கட்டினார். இரண்டு ஓவர்களில் 49 ரன்கள் சேர, ஆட்டத்தின் போக்கே மாறியது. அடுத்து வந்த குருணல் பாண்ட்யாவின் ஓவரையும், "அண்ணன் என்ன? தம்பி என்ன?" என்று இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு, 19 ரன்களைச் சேர்த்து, "கேம் ஆன்" மோடை ஆன் செய்தனர். அடுத்து வந்த புவனேஷ் ஓவரிலும் 13 ரன்கள் போக, 24 பந்துகளில் 52 ரன்கள் வேண்டும் என்ற நிலை வந்தது. "எப்படிப் போட்டாலும், யார் போட்டாலும் அடிதான்" என்று வெளுத்து கட்டு மோடில், பாண்டியாவும் வர்மாவும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

MI vs RCB

18ஆவது ஓவரை வீசிய புவனேஷ், 13 ரன்களைக் கொடுத்தாலும், அசுர வேகத்தில் ஆடிய ஜோடியைப் பிரித்தார். திலக் வர்மா 56(29) ரன்களில் அவுட். அதேபோல, ஹசல்வுட்டின் 19வது ஓவரின் முதல் பந்திலேயே பாண்ட்யாவின் 42(15) அற்புதமான ஆட்டமும் முடிவுக்கு வந்தது. இருந்தும், அந்த ஓவரில் சாண்ட்னர் சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட அந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அதேபோல, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அனைவரும் விரலின் நகத்தைக் கடிக்க வைக்கும் கடைசி ஓவரை குருணல் பாண்ட்யா வீசினார். முதல் இரண்டு பந்துகளில் சாண்ட்னரும் தீபக் சாகரும் விக்கெட் வீழ, ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது. அதிலும், தீபக் சாகரின் கேட்சை அற்புதமாக டேக் டீம் போட்டு பிடித்தது சால்ட்-டிம் டேவிட் கூட்டணி. அடுத்து வந்த ஹாட்ரிக் பந்தில், கீப்பர் ஜிதேஷ் ஸ்டெம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால், கடைசி மூன்று பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. நமன் திர் பவுண்டரியைப் பறக்கவிட்டார்.

MI vs RCB

இதனால், கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தால் மேட்ச் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலையில், நமன் திர் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் குருணல் பாண்ட்யா. "எங்க கிட்டயும் பாண்ட்யா இருக்கான் மாமே" என்று சொல்லும் அளவுக்கு, 6 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குருணல் பாண்ட்யா. இந்த வெற்றியின் மூலம், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பையை அதன் ஹோம் கிரவுண்டில் வீழ்த்தி, சாதனை படைத்துள்ளது ஆர்சிபி.

மும்பை ஆட்டத்தைத் தவறவிட்டது எங்கே? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்

MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ஹர்திக் பாண்ட்யா!

'மும்பை தோல்வி!'வான்கடே மைதானத்தில் நடந்திருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில் ப... மேலும் பார்க்க

IPL விதிகள் மீறல்; சம்பளத்தில் 25 சதவிகித அபராதம்; என்ன செய்தார் இஷாந்த்?

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷாந்த்சர்மாவுக்கு அவரது போட்டிக்கான சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. க... மேலும் பார்க்க

'கில் அல்ல, என்னைப் பொறுத்தவரை இவர்தான் அடுத்த கேப்டன்' - யாரைக் கைகாட்டுகிறார் கபில்தேவ்

இந்திய அணி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கணத்திலேயே, விராட் கோலி, ஜடேஜா ஆகியோருடன் கேப்டன் ரோஹித் சர்மாவும், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.அப்போது, ஒருநாள் மற்றும்... மேலும் பார்க்க

Siraj: "அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" - சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாகாதது குறித்து சிராஜ்

டிராவிஸ் ஹெட் விக்கெட்ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றது. இப்போட்டியில், முதலில் பேட்ட... மேலும் பார்க்க

Bumrah: "வெல்கம் முஃபாஸா" - RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்... மேலும் பார்க்க

SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' - குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 6) நேருக்குநேர் களமிறங்கின. கடைசி ... மேலும் பார்க்க