செய்திகள் :

Bumrah: "வெல்கம் முஃபாஸா" - RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

post image

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ரா, அதற்கடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.

அதன்தொடர்ச்சியாக, தற்போது ஐபிஎல்லிலும் மும்பை அணியில் முதல் நான்கு போட்டிகளை பும்ரா மிஸ் செய்தார். அதன் விளைவு, மும்பையின் மூன்று தோல்விகளிலும் எதிரொலித்தது. இத்தகைய சூழலில், பும்ரா பந்துவீசுவதற்கு ஃபிட் ஆகிவிட்டார் என்ற நற்செய்தி மும்பை ரசிகர்களைக் குதூகலப்படுத்தியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பும்ரா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை எக்ஸ் தளத்தில் அணி நிர்வாகம் ஷேர் செய்திருக்கிறது.

அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட், பும்ராவை அப்படியே தூக்கி `வெல்கம் முஃபாஸா' என வரவேற்றார். திங்களன்று (ஏப்ரல் 7) பெங்களூருவுக்கெதிராக நடைபெறும் போட்டிக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை வான்கடேவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே. அப்போது பும்ரா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்தனே, ``பும்ரா தயாராக இருக்கிறார். இன்று பயிற்சியில் ஈடுபட்டார். பெங்களூருவுக்கெதிரான போட்டியில் அவைலபிளாக இருப்பார். நேற்றிரவுதான் வந்தார், இன்று பந்துவீசினார். எல்லாம் நன்றாக இருக்கிறது." என்று கூறினார்.

மும்பை vs ஆர்.சி.பி போட்டியில், பும்ரா ஆடும்பட்சத்தில் கோலி vs பும்ரா ரைவல்ரி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

'கில் அல்ல, என்னைப் பொறுத்தவரை இவர்தான் அடுத்த கேப்டன்' - யாரைக் கைகாட்டுகிறார் கபில்தேவ்

இந்திய அணி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கணத்திலேயே, விராட் கோலி, ஜடேஜா ஆகியோருடன் கேப்டன் ரோஹித் சர்மாவும், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.அப்போது, ஒருநாள் மற்றும்... மேலும் பார்க்க

Siraj: "அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" - சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாகாதது குறித்து சிராஜ்

டிராவிஸ் ஹெட் விக்கெட்ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றது. இப்போட்டியில், முதலில் பேட்ட... மேலும் பார்க்க

SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' - குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 6) நேருக்குநேர் களமிறங்கின. கடைசி ... மேலும் பார்க்க

Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி

'பிளாஷ்பேக்!'சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல... மேலும் பார்க்க